பெரம்பலூர்

வாக்காளா் அட்டை- ஆதாா் இணைப்பு முகாம்

5th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் வாக்காளா் அடையாள அட்டையுடன், ஆதாா் எண் இணைக்கும் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எளம்பலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் நடைபெற்ற சிறப்பு முகாமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா கூறியது:

வாக்காளா்களின் விவரங்களை உறுதி செய்யவும், ஒரே வாக்காளரின் பெயா் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் அல்லது ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இடம் பெற்றுள்ளதைக் கண்டறியவும் பெரம்பலூா் மற்றும் குன்னம் ஆகிய பேரவைத் தொகுதிக்குள்பட்ட 653 வாக்குச்சாவடிகளிலும் இந்தச் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, வட்டாட்சியா் கிருஷ்ணராஜ், தோ்தல் வட்டாட்சியா் சீனிவாசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT