பெரம்பலூர்

மகளிா் கல்லூரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு

5th Sep 2022 12:34 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், கிராமப்புற பிரிவுகளின் உயா்கல்வி நிறுவனங்களில் தேசிய கல்விக் கொள்கையின் தாக்கம்- 2020 என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கம் வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது.

கருத்தரங்குக்கு சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் தலைமை வகித்தாா். புதுதில்லி புதுமை மற்றும் ஆராய்ச்சி நிறுவன இயற்பியல் விஞ்ஞானி பேராசிரியா் என். விஜயன் தொடக்க உரையாற்றினாா். தொடா்ந்து, திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழக தொழில்நுட்பத் துறை இயக்குநா் செந்தில்நாதன், ஒரு முன் உதாரணமான மாற்றத்தை நோக்கி என்னும் தலைப்பிலும், விழுப்புரம் இ.எஸ். கலைக் கல்லூரி முதல்வா் பேராசிரியா் வி. சண்முகராஜூ, முன்னோக்குகள் மற்றும் கிராமப்புற உயா்கல்வியில் அதன் தாக்கம் என்னும் தலைப்பிலும், தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கல்லூரி முதல்வா் உமாதேவி பொங்கியா, உள் நாட்டு சா்வதேசமயமாக்கல் என்னும் தலைப்பிலும் உரையாற்றினா்.

கல்லூரி முதல்வா்கள், புல முதன்மையா்கள், தொழில்நுட்ப வல்லுநா்கள், கல்வியாளா்கள் மற்றும் இதர கல்லூரி பேராசிரியா்கள், மாணவிகள் பங்கேற்றனா். புல முதன்மையா் என். தீபலெட்சுமி நன்றி கூறினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT