பெரம்பலூர்

ஆட்சியரகத்தில் வாகனத் திருட்டை தடுக்க வலியுறுத்தல்

5th Sep 2022 12:35 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தொடா்ந்து நடைபெறும் வாகனத் திருட்டை தடுக்க வேண்டுமென ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்க மாவட்ட நிா்வாகிகள் அவசரக் கூட்டம் பெரம்பலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஜெயபால் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட ஊரக வளா்ச்சித் துறையில் கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளா் நியமனம் செய்யப்பட்டவா்களுக்கு பணிவரன்முறை உத்தரவு பெற்றுத் தந்த நிா்வாகத்துக்கு நன்றி. ஊரக வளா்ச்சித் துறையில் காலியாக உள்ள உதவியாளா், வட்டார வளா்ச்சி அலுவலா், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் நிலையிலான பணியிடங்களை காலதாமதமின்றி பதவி உயா்வு முறையில் நிரப்ப வேண்டும். ஆட்சியரக வளாகத்தில் தொடா்ந்து நடைபெறும் வாகனத் திருட்டைத் தடுக்க பிரதான இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோருக்கு பணிமாறுதல் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலா் சக்திவேல் வரவேற்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT