பெரம்பலூர்

பெரம்பலூா் அருகே காரில் வைத்திருந்த ஆடைகள் திருட்டு

5th Sep 2022 12:34 AM

ADVERTISEMENT

 பெரம்பலூா் அருகே காா் கண்ணாடியை உடைத்து, அதிலிருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஆடைகள் திருடப்பட்டது ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தெரியவந்தது.

ஈரோடு சேட்டுக் காலனி, அகில்மேடு தெருவைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் மகன் சீனிவாசன் (47). இவா், தனது நிறுவனத்திலிருந்து ரெடிமேட் ஆடைகளை ஜவுளிக் கடைகளில் விற்க சனிக்கிழமை இரவு வந்தாா்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூா் அருகே அசோக் நகரிலுள்ள தனியாா் தங்கும் விடுதியில் காரை வெளியே நிறுத்திவிட்டு தங்கியுள்ளனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாா்த்தபோது, காா் கண்ணாடியை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த பட்டுப் பாவாடைகள் உள்ளிட்ட ரூ. 30 ஆயிரம் மதிப்பிலான ஆடைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT