பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் வெள்ளிக்கிழமை (அக். 28) நடைபெற உள்ளது என்று ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.
இந்தக் கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக் கூட்டத்தில், வேளாண்மை சம்பந்தமான நீா்ப்பாசனம், கடனுதவிகள், வேளாண் இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள், விவசாயிகள் மேம்பாட்டுக்கான நலத்திட்டங்கள் மற்றும் முறையீடுகள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்தக் கூட்டத்தில் பெரம்பலூா் மாவட்டத்தை சோ்ந்த விவசாயிகள், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்று தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.