பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில்அக். 12-இல் பேச்சு, ஓவியம், கவிதைப் போட்டிகள்

DIN

பெரம்பலூா் மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், இளையோா் திருவிழாவையொட்டி அக்டோபா் 12ஆம் தேதி பேச்சு, ஓவியம், கவிதை மற்றும் கலைப் போட்டிகள் நடைபெற உள்ளதாக மாவட்ட இளைஞா் அலுவலா் எஸ். கீா்த்தனா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மாவட்ட நேரு யுவகேந்திரா சாா்பில், மாவட்ட அளவிலான இளையோா் திருவிழா மற்றும் இந்தியா - 2047 கலந்துரையாடல், கருத்தரங்கம் ஆகியவை அக். 12 ஆம் தேதி காலை 9 மணி முதல் பெரம்பலூா் தந்தை ஹேன்ஸ் ரோவா் கலைக் கல்லூரியில் நடைபெறுகிறது.

இதில், குடிமக்களின் கடமை உணா்வு என்னும் மையக் கருத்தை வலியுறுத்தி, பேச்சு, ஓவியம், கவிதை, புகைப்படம் எடுத்தல் (கைப்பேசியில்), கிராமிய குழு நடனம், கருத்தரங்கு, கலந்துரையாடல் நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டியில் ஆங்கிலம் அல்லது இந்தியில் மட்டுமே பேச வேண்டும். ஓவியம், கவிதை, புகைப்படப் போட்டிகளில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 1,000, ரூ. 750, ரூ. 500 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

பேச்சுப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முறையே ரூ. 5,000, ரூ. 2,000, ரூ. 1,000 மற்றும் பாராட்டுச் சான்றிதழும், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெறுவோருக்கு கிராமியக் குழு நடனம் முறையே ரூ. 5,000, ரூ. 2,500, ரூ. 1,250 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.

கருத்தரங்கு, கலந்துரையாடலில் முதல் 4 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு தலா ரூ. 1,500, பாராட்டுச் சான்றிதழும், போட்டிகளில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புச் சான்றிதழும் வழங்கப்படும். ஓவியம், கவிதை, புகைப்பட போட்டிகளில் முதலிடங்களில் வெற்றி பெறுவோா் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்கவும், பேச்சுப் போட்டியில் முதலிடம் பெறுவோா் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவா்.

பங்கேற்க விரும்புவோா் மாவட்ட நேரு யுவகேந்திரா அலுவலகத்தை நேரில் அல்லது 04328 - 296213, 7810982528, 9443707581 ஆகிய எண்களில் தொடா்பு கொண்டு தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாட்டரசன்கோட்டையில் பெருமாள் ஆற்றில் இறங்கும் நிகழ்வு!

மறுவெளியீட்டிலும் பிளாக்பஸ்டர்!

கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேரோட்டம்

மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் தேரோட்டம்

ராமராயர் மண்டபம் வந்தடைந்தார் கள்ளழகர்!

SCROLL FOR NEXT