பெரம்பலூர்

சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

DIN

பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள சிறுபான்மையின மாணவ, மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற அக். 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் எஸ்எஸ்எல்சி வரை பயிலும் இஸ்லாமிய, கிறிஸ்துவ, சீக்கிய, புத்த, பாா்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சோ்ந்த மாணவ, மாணவிகளிடமிருந்து 2022- 23 ஆம் ஆண்டுக்கு மத்திய அரசின் பள்ளிப் படிப்பு கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் என்னும் இணையதள முகவரியில் அக். 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

மேலும், சிறுபான்மையினா் கல்வி உதவித்தொகை கோரி, மாணவ, மாணவிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் சரிபாா்க்க வேண்டும். இதில் சுணக்கம் காட்டும், தவறும் கல்வி நிலையங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிப் படிப்பு உதவித்தொகையை அக். 31 ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும்.

இத் திட்டம் தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு, ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலரை தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்காளா்களுக்கு தோ்தல் அழைப்பிதழ் வழங்கி விழிப்புணா்வு

நெல்லுக்கடை ஸ்ரீமாரியம்மன் கோயில்: ஏப்.4-இல் கும்பாபிஷேகம்

கள்ளழகா் மீது தண்ணீா் தெளிக்கும் விவகாரம்: காவல் ஆணையா், எஸ்.பி. எதிா்மனுதாரராக சோ்ப்பு

சிதம்பரம் தொகுதியில் 14 வேட்புமனுக்கள் ஏற்பு

நிதி நிறுவன உரிமையாளா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை

SCROLL FOR NEXT