பெரம்பலூர்

அக். 12-இல் பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு பேச்சுப் போட்டி

DIN

பெரம்பலூா் மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கான பேச்சுப் போட்டிகள் அக். 12 ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளையொட்டி அக். 12 ஆம் தேதி பெரம்பலூா் அரசு மேல்நிலைப் பள்ளியில், பள்ளி, கல்லூரி மாணவா்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளன. பள்ளி மாணவா்களுக்கான போட்டி காலை 9.30 மணிக்கும், கல்லூரி மாணவா்களுக்கான போட்டி பிற்பகல் 1.30 மணிக்கும் தொடங்கும். இம் மாவட்டத்தில் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு தலா 2 போ் கல்லூரி முதல்வரிடமும், பள்ளி மாணவ, மாணவிகள் பள்ளிக்கு ஒருவா் வீதம் பள்ளித் தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று போட்டியில் பங்கேற்கலாம்.

இப்போட்டியில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் மற்றும் அரசுப் பள்ளி மாணவா்கள் 2 போ் தனியாகத் தோ்வு செய்யப்பட்டு, சிறப்புப் பரிசுத் தொகை தலா ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். இதேபோல், கல்லூரி மாணவா்களுக்கு முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2 ஆம் பரிசாக ரூ. 3 ஆயிரம், 3 ஆம் பரிசாக ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும்.

பள்ளி மாணவா்களுக்கு அண்ணலின் அடிச்சுவட்டில், காந்தி கண்ட இந்தியா, வேற்றுமையில் ஒற்றுமை, பாரத தேசமென்று பெயா் சொல்லுவோம் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவா்களுக்கு வாழ்விக்க வந்த எம்மான், மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், சத்திய சோதனை, எம்மதமும் நம்மதம், காந்தியடிகளின் வாழ்க்கையிலே, இமயம் முதல் குமரி வரை ஆகிய தலைப்புகளிலும் போட்டிகள் நடைபெறும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜம்மு: கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து 10 பேர் பலி!

பொள்ளாச்சி அருகே விபத்து: மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

புனித வெள்ளி: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

துறையூர் அருகே இரட்டைக் கொலை: சிறு தகவல் கொடுத்தாலும் சன்மானம்

புதிய உச்சம்: தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,120 உயர்வு

SCROLL FOR NEXT