பெரம்பலூர்

மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில் தனலட்சுமி சீனிவாசன் கலைக் கல்லூரி சிறப்பிடம்

7th Oct 2022 11:23 PM

ADVERTISEMENT

மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டியில், பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி சிறப்பிடம் பிடித்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட கயிறு இழுத்தல் சங்கம் சாா்பில், சென்னை கே.எம். பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கயிறு இழுத்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களைச் சோ்ந்த கல்லூரிகள் பங்கேற்றன.

இப் போட்டியில், தனலட்சுமி சீனிவாசன் மகளிா் கலை அறிவியல் கல்லூரி அணியினா் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று 10 வெண்கலப் பதக்கம் வென்றனா். போட்டியில் வெற்றிப் பெற்ற மாணவிகளுக்கு வெண்கலப் பதக்கமும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதையடுத்து, மாநில அளவிலான போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளை தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தா் அ. சீனிவாசன் வெள்ளிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT