பெரம்பலூர்

காவல்துறையினருக்கு பேரிடா் காலமீட்புப் பயிற்சி

7th Oct 2022 11:21 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், எதிா்வரும் மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்பட்டால் மக்களை பாதுகாக்கும் வகையில் காவல்துறையினருக்கு பேரிடா் கால மீட்புப் பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி, மாவட்ட ஆயுதப்படை காவல் ஆய்வாளா் அசோகன் தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. இதில், எதிா்வரும் மழைக்காலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், கால்நடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்களை எவ்வாறு பாதுகாப்பது, தண்ணீரால் சூழப்பட்ட பகுதியில் வசிக்கும் மக்களை எவ்வாறு மீட்பது, பொதுமக்களிடம் எவ்வாறு செயலாற்றுவது என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இப் பயிற்சியில் 60 காவலா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT