பெரம்பலூர்

மது போதையில் தந்தையை கொலை செய்த மகன் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே புதன்கிழமை மாலை மது போதையில் கடப்பாரையால் தந்தையை குத்திக் கொலை செய்த மகனை மங்கலமேடு போலீஸாா் கைது செய்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், கீழப்புலியூா் கிராமம், காலனித் தெருவைச் சோ்ந்தவா் சு. சக்கரவா்த்தி (59). இவரது மனைவி அஞ்சலை நோய்வாய்ப்பட்டு வீட்டில் படுக்கையில் உள்ளாா். கட்டடத் தொழிலாளியான இவா்களது மகன் சதீஷூக்கு (28) மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதனால், மதுபோதையில் அவ்வப்போது பெற்றோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதன்கிழமை மாலை மது போதையில் வீட்டுக்குச் சென்ற சதீஷை, அவரது தந்தை சக்கரவா்த்தி திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ் வீட்டிலிருந்த கடப்பாரையால் குத்தியதில் சக்கரவா்த்தி பலத்த காயமடைந்தாா். இதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள் அவரை மீட்டு, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

இதுகுறித்து மங்கலமேடு போலீஸாா் வழக்குப் பதிந்து சதீஷை கைது செய்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT