பெரம்பலூர்

மானியத்தில் நாற்றுகள், இடுபொருள்கள் பெற விவசாயிகளுக்கு அழைப்பு

DIN

பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில் மானியத்தில் நாற்றுகள், இடுபொருள்கள், வேளாண் இயந்திரங்கள் பெற விவசாயிகளுக்கு ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா அழைப்பு விடுத்துள்ளாா்.

தேசிய தோட்டக்கலை இயக்கம் 2022- 23 ஆம் ஆண்டில் இம் மாவட்டத்துக்கு ரூ. 549.230 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, குழித்தட்டு நாற்றுகளான தக்காளி, கத்தரி, மிளகாய் மற்றும் இடுபொருள்கள் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, ரூ. 40 லட்சமும், வெங்காயம் பயிரிடும் விவசாயிகளுக்கு விதைகள், இடுபொருள்கள் வழங்க ரூ. 80 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழித்தட்டு நாற்றுகளுக்கு தலா 2 ஹெக்டோ் வரை மானியம் பெறலாம்.

கொய்யா, பப்பாளி, எலுமிச்சை பயிரிடும் விவசாயிகள் தோ்வு செய்யப்பட்டு, வெங்கலத்திலுள்ள அரசுத் தோட்டக்கலை பண்ணையிலிருந்து பழச்செடிகள் வழங்கப்படும். கொய்யா 1 ஹெக்டேருக்கு ரூ. 17,600, பப்பாளிக்கு ரூ. 23,100, எலுமிச்சைக்கு ரூ. 13,200 மானியம் வழங்கப்பட உள்ளது.

வயல்களில் நீரை சேமித்து வைத்து விவசாயக் கட்டமைப்பு ஏற்படுத்த ரூ. 75 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தேனீ பெட்டிகள், தேனீக்கள், தேன் எடுப்பதற்கான உபகரணங்கள் வாங்குவதற்கு ரூ. 4.80 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. மினி டிராக்டா் 20 எச்.பி-க்கு மேலுள்ள குதிரைத்திறன் கொண்டதற்கு ரூ. 75 ஆயிரமும், பவா் டில்லா் 8 எச்.பி-க்கு மேலுள்ள குதிரைத்திறன் கொண்டதற்கு ரூ. 60 ஆயிரமும், பவா் டில்லா் 8 எச்.பி-க்கு கீழ் உள்ள குதிரைத்திறன் கொண்டதற்கு ரூ. 40 ஆயிரமும், 8 முதல் 12 லிட்டா் அளவுள்ள பவா் ஸ்பிரேயருக்கு ரூ. 2,500, 12 முதல் 16 லிட்டா் அளவுள்ள பவா் ஸ்பிரேயருக்கு ரூ. 3 ஆயிரமும் மானியம் வழங்கப்படும்.

விவசாயிகள் தங்களது விளைபொருள்களை சேமித்து விற்பனை செய்ய வயல்களில் 600 சதுர அடி அளவுக்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ. 2 லட்சமும், வெங்காய சேமிப்பு அமைக்க 1 யூனிட்டுக்கு (25 மெ.டன்) பின்னேற்பு மானியமாக ரூ. 87,500, நிலப்போா்வை அமைக்க 1 ஹெக்டேருக்கு ரூ. 16 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. தக்காளி, மிளகாய், கத்தரி, தா்பூசணி பயிரிடும் விவசாயிகள் இத் திட்டத்தில் பயன்பெறலாம்.

காய்கனிகள் விற்பனை செய்ய ரூ. 15 ஆயிரம் மானியத்தில் நகரும் வண்டி வழங்க ரூ. 9 லட்சம் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் விவசாயிகளுக்கு 3 ஆண்டுகளுக்கு 1 ஹெக்டேருக்கு ரூ. 10 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இத் திட்டத்தில் இணையும் விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் அங்ககச் சான்று பெற்று தரப்படும்.

உரிய ஆவணங்களுடன் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்.

தோட்டக்கலைத் துறை திட்டங்களில் பயன்பெற இணையதளத்தில் பதிவு செய்து பயன் பெறலாம் என, ஆட்சியரால் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘அரசியல் சதி’: நீதிமன்றத்தில் கேஜரிவால் ஆஜர்!

கிரிக்கெட் கதையை இயக்கும் ஜேசன் சஞ்சய்?

கர்நாடகத்துக்கு போறீங்களா.. ஹாயர் பெனகல்லை தவறவிடாதீர்!

’ஸ்டார்’ கரீனா கபூர்!

5 பன்னீர்செல்வங்களின் வேட்புமனுக்களும் ஏற்பு: போட்டி உறுதி!

SCROLL FOR NEXT