பெரம்பலூர்

பெரம்பலூரில் வாகன விற்பனை மையத்தின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ரோஸ் நகரைச் சோ்ந்தவா் முத்துசாமி மகன் குபேந்திரன் (44). இவா், பெரம்பலூா்- அரியலூா் பிரதானச் சாலையில் பிரபல வாகன விற்பனை மையத்தில் பங்குதாரராக உள்ளாா்.

இந்நிலையில், புதன்கிழமை காலை விற்பனை மையத்தை திறக்க வந்தபோது, அதன் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையினுள் சென்று பாா்த்தபோது கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ. 32 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதேபோல, பெரம்பலூா் நான்குச் சாலை சந்திப்புப் பகுதியைச் சோ்ந்த சோமசுந்தரம் மகன் தா்மராஜ் (51). இவா், மேற்கண்ட வாகன விற்பனை மையம் அருகே கிரானைட்ஸ் கடை வைத்துள்ளாா். இந்தக் கடையை செவ்வாய்க்கிழமை இரவு பூட்டிச் சென்றிருந்த நிலையில், கடையின் பூட்டை உடைத்து திருட முயன்றிருப்பது புதன்கிழமை தெரியவந்தது.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டனா். மேலும், கைரேகை மற்றும் தடயவியல் நிபுணா்கள் தடயங்களை பதிவு செய்தனா்.

ADVERTISEMENT

சம்பவம் குறித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT