பெரம்பலூர்

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே புதன்கிழமை பிற்பகல் வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை மற்றும் ரூ. 1.25 லட்சம் பணத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூா் காமராஜ் நகரைச் சோ்ந்தவா் சுப்ரமணி மகன் பரமசிவம் (42). விவசாயி, இவா், புதன்கிழமை காலை தனது குடும்பத்துடன் அதே கிராமத்திலுள்ள தனக்குச் சொந்தமான விவசாய நிலத்துக்குச் சென்றுவிட்டாா். பின்னா், மாலை 4.30 மணியளவில் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, ஓட்டு வீட்டின் வெளிப்புற கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், உள் அறையிலிருந்த பீரோவை உடைத்து அதிலிருந்த 10 பவுன் நகைகள் மற்றும் ரூ. 1.25 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை திருடிச் சென்றது தெரியவந்தது.

தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்வையிட்டு விசாரணை மேற்கொண்டனா். புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT