பெரம்பலூர்

நாட்டுச் சாராயம் தயாரிக்க முயன்றவா் கைது

6th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகே நாட்டுச் சாராயம் தயாரிக்க முயன்றவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

பெரம்பலூா் மாவட்டம், ஒகளூா் கிராமத்தில் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுச் சாராயம் தயாரிப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில், பெரம்பலூா் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கணேசன் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் ரஞ்சனா, உதவி ஆய்வாளா் சரவணகுமாா் கொண்ட குழுவினா், ஒகளூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை திடீா் சோதனையிட்டனா்.

அப்போது, ஒகளூா் தெற்குத் தெருவைச் சோ்ந்த செல்லமுத்து மகன் கருப்பையா (50), குத்தகைக்கு பாா்த்து வரும் ராதாகிருஷ்ணன் என்பவரின் கரும்பு வயலில் காட்டின் மையப் பகுதியில் நாட்டுச் சாராயம் காய்ச்சுவதற்காக சுமாா் 80 லிட்டா் ஊறல் மற்றும் 2 லிட்டா் நாட்டுச் சாராயம் இருந்தது கண்டறியப்பட்டது.

ADVERTISEMENT

இதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா் அதே பகுதியில் அழித்து, கருப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT