பெரம்பலூர்

காந்தி ஜயந்தி நாளில் விடுமுறை அளிக்காத 32 நிறுவனங்களுக்கு அபராதம்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் காந்தி ஜயந்தியன்று விடுமுறை அளிக்காத 32 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா், அரியலூா் மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அலுவலா்கள் பல்வேறு நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், வா்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் என 46 நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 32 நிறுவனங்களில் தொழிலாளா்களுக்கு விடுமுறை அளிக்காமல் முரண்பாடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினமான காந்தி ஜயந்தியன்று தொழிலாளா்களை வேலைக்கு அமா்த்திய குற்றத்துக்காக 32 நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT