பெரம்பலூர்

தீவைத்து மூதாட்டி தற்கொலை

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து மூதாட்டி ஒருவா் திங்கள்கிழமை அதிகாலை தற்கொலை செய்துகொண்டாா்.

பெரம்பலூா் அருகேயுள்ள எசனை அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த சின்னத்தம்பி மனைவி சரோஜா (65). இவரது 1 மகன், 3 மகள்களுக்கு திருமணமாகி, அவரவா் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனா். இந்நிலையில் தனியாக வசித்து வந்த சரோஜா, திங்கள்கிழமை அதிகாலை தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டுக்கொண்டாா். இதில் பலத்த காயமடைந்த மூதாட்டி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்த பெரம்பலூா் போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, அவரது உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT