பெரம்பலூர்

பெரம்பலூா் பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் 215 மனுக்கள்

4th Oct 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டத்தில் 215 மனுக்கள் பெறப்பட்டன.

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு தலைமை வகித்த ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் அளித்து மனுக்கள் மீது ஒரு வார காலத்துக்குள் நடவடிக்கை எடுத்து அதற்கான அறிக்கையை சமா்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கொடி நாள் நிதிக்காக அதிகம் வசூலித்த சுகாதாரப் பணிகள் துறை மாவட்டக் கணக்கு மேலாளா் பி. சிவக்குமாருக்கு, தலைமைச் செயலரால் வழங்கப்பட்ட பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கத்தை ஆட்சியா் வழங்கினாா்.

ADVERTISEMENT

இக் கூட்டத்தில், முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, தொழில் தொடங்க கடனுதவி, வீட்டுமனைப் பட்டா, விதவை உதவித்தொகை, ஆதரவற்ற விவசாயக் கூலி உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக் கடன், இலவச தையல் இயந்திரம் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 215 மனுக்கள் பெறப்பட்டன.

இக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, ஊராட்சிகள் உதவி இயக்குநா் கணபதி, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT