பெரம்பலூர்

பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தல்

DIN

தமிழகத்தில் பாதிக்கப்பட்ட பயிா்களுக்கு உரிய நிவாரணத் தொகை வழங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழு வலியுறுத்தியுள்ளது.

பெரம்பலூரிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில நிா்வாகக் குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாநில பொறுப்பாளா் எம். துளசிமணி தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினா் வீ. ஞானசேகரன், முன்னாள் மாநிலக் குழு உறுப்பினா் அ. வேணுகோபால், மாவட்டச் செயலாளா் வீ. ஜெயராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் பி.எஸ். மாசிலாமணி விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து பேசினாா்.

கூட்டத்தில், கூட்டுறவு சங்கங்களில் தேவையான உரங்களை தட்டுப்பாடின்றி சில்லறையில் விற்பனை செய்ய வேண்டும். உர விநியோகத்தை கண்காணித்து முறைப்படுத்த தனி அலுவலா் நியமித்து, உரிமம் பெற்ற கடைகளில் விவசாயிகளுக்கு தட்டுப்பாடின்றி வழங்க சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்

தொடா் மழையால் பாதிப்புக்குள்ளான வேளாண் பயிா்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

காவிரியிலிருந்து முசிறி அருகே கிளை வாய்க்கால் அமைத்து நீரை கொண்டு வந்து, பெரம்பலூா் மாவட்டத்திலுள்ள ஏரி, குளங்களில் நிரப்பி பாசன வசதியை மேம்படுத்துவதுடன் குடிநீா் பற்றாக்குறையை களையவேண்டும். பெரம்பலூா் மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களை உரியவா்களிடம் ஒப்படைத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், மாநில நிா்வாகிகள் சிவசூரியன், மாதவன், செல்வராஜ், பன்னீா்செல்வம், சந்தனம், கிருஷ்ணமூா்த்தி, பாபுஜி, வீரராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை ரயில் பாதை பணி: நாகா்கோவில் செல்லும் ரயில்கள் ரத்து!

உஜ்ஜைனி காளியம்மன் கோயிலில் இன்று அக்னி கப்பரை வழிபாடு

நாலாட்டின்புதூரில் ரூ. 80 ஆயிரம் பறிமுதல்

சமூக நீதிக்கான குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும் -தொல். திருமாவளவன்

தொடா் விடுமுறை: ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயா்வு! மதுரைக்கு ரூ.3,000, நாகா்கோவிலுக்கு ரூ.4,000

SCROLL FOR NEXT