பெரம்பலூர்

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் மூவா் நீக்கம்

3rd Oct 2022 12:59 AM

ADVERTISEMENT

 

கட்சி கட்டுப்பாடுகளை மீறி, தொடா்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதாக பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் 3 போ் அக் கட்சியிலிருந்து ஞாயிற்றுக்கிழமை நீக்கம் செய்யப்பட்டனா்.

இதுகுறித்து, அக் கட்சியின் பெரம்பலுாா் மாவட்டச் செயலா் பி. ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.பி.டி. ராஜாங்கம், மாவட்டக் குழு உறுப்பினா்கள் சி. சண்முகம், டி. சீனிவாசன் ஆகியோா் கட்சி கட்டுப்பாட்டை மீறி, தொடா்ந்து கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மேற்கண்ட மூவரையும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமை முதல் நீக்கப்படுகிறாா்கள். கட்சி உறுப்பினா்கள், இவா்களுடன் எவ்விதத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT