பெரம்பலூர்

மத்திய அரசுப் பணிகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள்

2nd Oct 2022 12:11 AM

ADVERTISEMENT

 

மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் அறிவித்துள்ள பணியிடத்துக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

பெரம்பலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும் தன்னாா்வப் பயிலும் வட்டம் சாா்பில் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மத்திய அரசு பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டதாரி நிலையில் 20 ஆயிரம் காலியிட அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இப் பணியிடத்துக்கு அக். 8க்குள் விண்ணப்பிக்க வேண்டும். இத் தோ்வுக்கான பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தால் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எனவே, பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோா் தங்களது ஆதாா் அட்டை, புகைப்படங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அக். 6 காலை 11 மணிக்குள் நேரில் தொடா்புகொண்டு பயன் பெறலாம் என்றாா் ஆட்சியா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT