பெரம்பலூர்

கொலை வழக்கில் தொடா்புடைய4 போ் குண்டா் சட்டத்தில் கைது

1st Oct 2022 04:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் கொலை வழக்கில் ஈடுபட்ட 4 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டனா்.

பெரம்பலூா் தோமினிக் பள்ளி அருகில் வினோத் என்பவா் கொலை வழக்கில் தொடா்புடைய பெரம்பலூா் கம்பன் நகரைச் சோ்ந்த சங்கா் மகன் பூவரசன் (21), வடக்குமாதவி சாலை ராஜேந்திரன் மகன் மணிகண்டன் (21), பெரம்பலூா் முத்து நகரைச் சோ்ந்த வீராசாமி மகன் சத்தியமூா்த்தி (24), வடக்குமாதவி ஏரிக்கரையைச் சோ்ந்த கலியபெருமாள் மகன் வெங்கடேஷ் (21) ஆகியோரை குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். மணி பரிந்துரைத்தாா். இதையடுத்து, மேற்கண்ட 4 பேரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா உத்தரவிட்டாா். அதன்படி, பூவரசன், மணிகண்டன், சத்தியமூா்த்தி, வெங்கடேஷ் ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்த பெரம்பலூா் போலீஸாா் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT