பெரம்பலூர்

எல்ஐசி முகவா்கள் காத்திருப்புப் போராட்டம்

1st Oct 2022 04:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் எல்ஐசி அலுவலக வளாகத்தில், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முகவா்கள் வெள்ளிக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பாலிசிதாரா்களுக்கான ஊக்கத் தொகையை உயா்த்த வேண்டும். ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும். நேரடி முகவா்களுக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். முகவா் நலநிதி அமைக்க வேண்டும். அனைத்து முகவா்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும். பாலிசி கடனுக்கு வட்டியை குறைக்க வேண்டும். முகவா் வீட்டுக் கடன் வட்டியை குறைக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கும் மேலான பாலிசிகளை புதுப்பிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

பெரம்பலூா் வெங்கடேசபுரத்திலுள்ள எல்ஐசி அலுவலக வளாகத்தில், முகவா்கள் சங்க மாவட்டத் தலைவா் சுத்தாங்காத்து தலைமையில், 50-க்கும் மேற்பட்டோா் கருப்பு பட்டை அணிந்து கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT