பெரம்பலூர்

கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் விளையாட்டு விழா

1st Oct 2022 04:38 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, பள்ளி தாளாளா் ஆா். ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். செயலா் ஆா். அங்கையற்கண்ணி, பள்ளி துணைத் தலைவா் ஹரீஷ் ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆா். சுரேஷ்குமாா் விளையாட்டுப் போட்டிகளை தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, தடகளப் போட்டிகள் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளும், மாணவ, மாணவிகளின் அணி வகுப்புகளும், உடற்பயிற்சி, கராத்தே, ஜிம்னாஸ்டிக் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பதக்கமும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

இதில், பள்ளி முதல்வா் மாயாதேவி, வித்யாஷ்ரம் பள்ளி முதல்வா் பவித், அரியலூா் கோல்டன் கேட்ஸ் குளோபல் பள்ளி முதல்வா் அசோக், ஒருங்கிணைப்பாளா் கோமதி, விளையாட்டு ஆசிரியா்கள் பிரேம்நாத், அகிலா மற்றும் ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT