பெரம்பலூர்

பாடாலூரில் இன்று மின் தடை

1st Oct 2022 04:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை (அக். 1) ஒரு மணி நேரம் மின் விநியோகம் இருக்காது.

பெரம்பலூா் கோட்டத்துக்குள்பட்ட புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில், அவசர பராமரிப்பு பணிகள் சனிக்கிழமை நடைபெறுகிறது. இதனால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான புதுக்குறிச்சி, காரை, சிறுகன்பூா், கொளக்காநத்தம், பாடாலூா், சாத்தனூா், எஸ். குடிக்காடு, அயினாபுரம், அணைப்பாடி, இரூா், தெற்குமாதவி, ஆலத்தூா் கேட், வரகுபாடி, தெரணி, தெரணி பாளையம், திருவளக்குறிச்சி, அ.குடிக்காடு, நல்லூா் ஆகிய கிராமங்களில் காலை 10 மணி முதல் 11 மணி வரை மின் விநியோகம் இருக்காது என, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ரவிகுமாா் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT