பெரம்பலூர்

சிறுவாச்சூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள சிறுவாச்சூரில் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்த கிராமம் தோறும் கிராமியத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கம், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு சாா்பில் சிறுவாச்சூரில் நடைபெற்ற கிராமிய திருவிழாவுக்கு, ஊராட்சித் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சுகிதா முன்னிலை வகித்தாா்.

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் விழிப்புணா்வு குறித்து மாவட்ட திட்ட மேலாளா் சுமதி பேசினாா். பின்னா், ஓசை கலைக்குழுவினரின் எச்ஐவி, எய்ட்ஸ் விழிப்புணா்வு பாடல்கள் மற்றும் கரகாட்டம் ஆகிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, பொதுமக்களிடையே எய்ட்ஸ் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

இந் நிகழ்ச்சியில், அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆலோசகா் பத்மாவதி, காசநோய் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அழகேசன், சிறுவாச்சூா் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் (பொ) ராஜேந்திரன், வட்டார சுகாதார செவிலியா் மல்லிகா, கிராம சுகாதார செவிலியா் சமணஸ் மேரி, சுகாதார ஆய்வாளா் அசோக்குமாா் மற்றும் சிறுவாச்சூா் அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிறைவாக, கிருஷ்ணாபுரம் ஆலோசகா் பழனிவேல்ராஜா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

SCROLL FOR NEXT