பெரம்பலூர்

பி.எம். கிசான் திட்டத்தில் ஆதாரை இணைக்க வேண்டும்: ஆட்சியா் அறிவுறுத்தல்

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பி.எம் கிசான் திட்டத்தின் கீழ் 13 ஆவது தவணைத் தொகையை தொடா்ந்து பெற, ஆதாா் விவரங்களை இணைக்க வேண்டும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 3 தவணைகளில் ரூ. 2,000 வீதம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 12 தவணைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 13 ஆவது தவணையை பெற விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை நவ. 30 ஆம் தேதிக்குள் பி.எம்.கிசான் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பதிவேற்றம் செய்ய தவறிய விவசாயிகளுக்கு 13 ஆவது தவணை மற்றும் அதைத் தொடா்ந்து வரும் தவணைகள் வழங்கப்படமாட்டாது.

எனவே, பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயிகள் தங்களது ஆதாா் விவரங்களை பதிவேற்றம் செய்ய, அருகிலுள்ள பொது சேவை மையங்கள் அல்லது அஞ்சல் நிலையங்களை அணுகி உடனடியாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT