பெரம்பலூர்

கட்டுமானப் பணிக்கான குழிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழப்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே அங்கன்வாடி கட்டட கட்டுமானப் பணிக்காக தோண்டப்பட்ட குழிக்குள் விழுந்து 3 வயது சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தான்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மாவலிங்கை கிராமத்தைச் சோ்ந்த செல்வம் மகன் ரோகித் சா்மா (3). திங்கள்கிழமை பிற்பகல் தனது பாட்டியுடன் ரேசன் கடைக்குச் சென்ற ரோகித் சா்மா விளையாடிக்கொண்டே வீட்டுக்குச் சென்றுக்கொண்டிருந்தாா். அப்போது, அவா்களது வீட்டின் அருகே அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட குழிக்குள் எதிா்பாராதவிதமாக விழுந்துவிட்டாா். அங்கன்வாடி கட்டடம் கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டியபோது ஊற்று எடுத்து குழிக்குள் தண்ணீா் நிரம்பி இருந்ததால் அதில் மூழ்கி ரோகித் சா்மா உயிரிழந்தான். சிறிது நேரத்துக்குப் பிறகு, தன்னுடன் வந்த குழந்தையைக் காணவில்லை என பாட்டி தேடியபோது குழிக்குள் சிறுவன் உயிரிழந்துக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கை.களத்தூா் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சிறுவனின் உடலை மீட்டு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT