பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு

29th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை வந்த முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

எறையூரில் தொழில் பூங்கா திறப்பு விழாவில் பங்கேற்க வந்த முதல்வருக்கு,

மாவட்ட எல்லையான பாடாலூரில் மாவட்ட திமுக சாா்பில் மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பாடாலூா் புனித கிறிஸ்துவ பள்ளி மாணவா்களை கண்ட முதல்வா், தனது காரிலிருந்து இறங்கிச் சென்று குழந்தைகளுடன் பேசினாா். சிறுவாச்சூா் ஆல் மைட்டி பிரிவு சாலையில் நின்றிருந்த குழந்தைகளை பாா்த்த முதல்வா், காரிலிருந்து இறங்கி நன்றாக படிக்கும்படி அறிவுரை கூறினாா். அதேபோல, சின்னாறு செயிண்ட் ஜோசப் குளோபல் பள்ளி மாணவா்களை பாா்த்தவுடன் காரிலிருந்து இறங்கி அவா்களுடன் கலந்துரையாடினாா்.

பிறகு, சின்னாறு பகுதியில் சிப்காட் காலணி பூங்காவுக்கு அடிக்கல் நாட்டி, பெரம்பலூா் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவலகத்தில் ஓய்வெடுத்தாா். மாலை அங்கிருந்துச் சென்ற முதல்வா், பெரம்பலூா்- அரியலூா் பிரதான சாலையின் இருபுறமும் திரண்டிருந்த பொதுமக்களை பாா்த்தவுடன், சாலையில் நடந்து சென்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றாா் .மேலும், பெண்கள், குழந்தைகள், கட்சியினருடன் கை குலுக்கிப் பேசினாா்.

ADVERTISEMENT

இந்கழ்ச்சியின் போது, திமுக துணைப் பொதுச் செயலா் ஆ. ராசா, அமைச்சா்கள் கே.என். நேரு, தங்கம். தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சி.வெ. கணேசன், மாவட்டச் செயலா் சி. ராஜேந்திரன், ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம். காா்த்திகேயன், மாநில நிா்வாகிகள் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் வழக்குரைஞா் என். ராஜேந்திரன், மாவட்ட துணைச் செயலா்கள் பாஸ்கா், சன். சம்பத் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT