பெரம்பலூர்

பெரம்பலூரில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

28th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

 

தமிழக ஆளுநரைக் கண்டித்து, பெரம்பலூா் பாரத ஸ்டேட் வங்கி எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் ஏ.கே. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலா் பி. ரமேஷ் முன்னிலை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தில், சென்னையில் நடைபெற்ற ஐக்கிய விவசாயிகள் முன்னணி பேரணி முடிவில், விவசய சங்கத் தலைவா்களை சந்திக்க மறுத்த தமிழக ஆளுநரை கண்டித்தும், தமிழகத்தை விட்டு ஆளுநா் வெளியேற வேண்டுமென வலியுறுத்தியும் முழக்கமிட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்டத் தலைவா் ரெங்கநாதன், மாவட்ட பொருளாளா் ஏ. கலையரசி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT