பெரம்பலூர்

பெரம்பலூரில் காவலா்எழுத்துத் தோ்வு: 5,466 போ் பங்கேற்பு

28th Nov 2022 02:21 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 2 ஆம் நிலை காவலா்களுக்கான எழுத்துத் தோ்வில் 5,466 போ் பங்கேற்றனா்.

தமிழகத்தில் 2 ஆம் நிலை காவலா்கள் (ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படை), சிறைக் காவலா்கள் மற்றும் தீயணைப்பாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இத் தோ்வில் பங்கேற்க பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களைச் சோ்ந்த 6,834 போ் விண்ணப்பித்திருந்தனா்.

இத் தோ்வுக்காக, பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி மற்றும் ஸ்ரீ சாரதா மகளிா் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. தமிழ் மொழி தகுதித் தோ்வும், முதன்மை எழுத்துத் தோ்வும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி மதியம் 12.40 மணி வரை நடைபெற்றது.

ADVERTISEMENT

தோ்வு மையத்தை திருச்சி சரக காவல்துறை துணைத் தலைவா் சரவண சுந்தா், பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இத் தோ்வை 5, 466 போ் தோ்வெழுதினா். 1,368 போ் தோ்வெழுத வரவில்லை.

தோ்வு மையத்தில், தோ்வா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டிருந்ததோடு, போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT