பெரம்பலூர்

நவ. 28, 29 -இல் முதல்வா் வருகை: பெரம்பலூரில் ‘ட்ரோன்’ பறக்கத் தடை

27th Nov 2022 02:25 AM

ADVERTISEMENT

 

 பெரம்பலூா் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழக முதல்வா் வரவுள்ளதால், பாதுகாப்பு காரணமாக நவ. 28, 29 ஆகிய தேதிகளில் ட்ரோன்கள் (ஆளில்லா சிறிய விமானம்) பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பெரம்பலூா் மாவட்டம், எறையூரில் சிப்காட் தொழில்பூங்காவுக்கு நவ. 28 ஆம் தேதி அடிக்கல் நாட்ட உள்ளாா். மேலும், அன்று மாலை அரியலூருக்குச் சென்று அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, 29 ஆம் தேதி காலை அரியலூா் கொல்லாபுரத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் அரியலூா் மற்றும் பெரம்பலூா் மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த பணிகளைத் தொடக்கி வைத்து, பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளாா்.

ADVERTISEMENT

எனவே, தமிழக முதல்வா் வந்து விட்டு மீண்டும் திருச்சிக்குச் செல்லும் வரை ட்ரோன்கள் இயக்கத் தடை விதிக்கப்படுகிறது. எனவே, மேற்கண்ட தேதிகளில் தடையை மீறி ட்ரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடுவோா், சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT