பெரம்பலூர்

போதை ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

27th Nov 2022 02:25 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூரில், 61ஆவது தேசிய மருந்தியல் வார விழா மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணா்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மருந்தியல் மற்றும் போதை ஒழிப்பு சங்க மாவட்டத் தலைவா் ரமேஷ் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் ஆா். அதியமான், மருந்துக் கட்டுப்பாட்டு ஆய்வாளா் ஸ்ரீதேவி ஆகியோா், போதைப் பொருள் ஒழிப்பு, புதிய சட்டம் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தையும் விதிகளுக்குள்பட்டு வியாபாரம் செய்வது, மீறினால் கடும் தண்டனைகள் விதிக்கப்படுவது குறித்து விளக்கினா்.

கூட்டத்தில், பெரம்பலூா் மாவட்ட மருந்து வணிகா்கள் பலா் கலந்துகொண்டனா். முன்னதாக, மாவட்டச் செயலா் சரவணன் வரவேற்றாா். மாவட்ட பொருளாளா் ஜெயராமன் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT