பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலா்களும் இந்திய அரசமைப்பு முகப்புரை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் ந. அங்கையற்கண்ணி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சுப்பையா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.