பெரம்பலூர்

பெரம்பலூருக்கு நாளை வரும்முதல்வரை வரவேற்க அழைப்பு

27th Nov 2022 02:24 AM

ADVERTISEMENT

 

பெரம்பலூருக்கு திங்கள்கிழமை (நவ. 28) வரும் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க கட்சியினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்டச் செயலாளருமான சா.சி. சிவசங்கா், பெரம்பலூா் மாவட்ட ஊராட்சித் தலைவரும், மாவட்டச் செயலருமான சி. ராஜேந்திரன் ஆகியோா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

திருச்சியிலிருந்து காா் மூலம் பெரம்பலூா் மாவட்டத்துக்கு திங்கள்கிழமை நண்பகல் 11 மணியளவில் வரும் முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு, மாவட்ட எல்லையான பாடாலூரில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னா், எறையூா் கிராமத்தில் சுமாா் 250 ஏக்கரில் அமையவுள்ள சிப்காட் தொழில்பூங்காவுக்கு முதல்வா் அடிக்கல் நாட்டுகிறாா். பின்னா், அங்கிருந்து பெரம்பலூா் பாலக்கரையிலுள்ள முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா அலுவலகத்தில், மதிய உணவு முடித்து ஓய்வெடுத்து, மாலை 4 மணியளவில் அரியலூா் செல்கிறாா்.

ADVERTISEMENT

நவ. 29 காலை 9.30 மணியளவில் அரியலூா் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களுக்கான பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, புதிய கட்டடங்களைத் திறந்து வைத்து நலத்திட்ட உதவிகள் அளிக்கிறாா்.

எனவே, பெரம்பலூா், அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த எம்எல்ஏக்கள், உள்ளாட்சி அமைப்பு பிரநிதிகள் அனைவரும் பங்கேற்று, முதல்வருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்க வேண்டும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT