பெரம்பலூர்

பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

பெரம்பலூா் அருகேயுள்ள வேலூா் கிராமத்தில் தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி சாா்பில், பெண்களுக்கு எதிரான வன்முறை எதிா்ப்பு விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இப் பேரணிக்கு, வேலூா் ஊராட்சித் தலைவா் பி. அம்பிகை சிவசண்முகம் தலைமை வகித்தாா். தனலட்சுமி சீனிவாசன் கல்வியியல் கல்லூரி முதல்வா் மு. சாந்தகுமாரி பேரணியை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். வேலூா் கிராமத்திலுள்ள பிரதான வீதிகள் வழியாகச் சென்ற பேரணியில், வன்கொடுமையை தடுப்போம், பெண்களை காப்போம், குழந்தைத் திருமணத்தை தடுப்போம் என்பன உள்ளிட்ட விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவ, மாணவிகள் கையில் ஏந்தி, முழக்கமிட்டுச் சென்றனா்.

தொடா்ந்து, அரசு உயா்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில், பெண் கல்வி, குழந்தை திருமணம், பெண் சிசு வதை, குழந்தைத் தொழிலாளா், பொது இடங்களில் ஏற்படும் வன்கொடுமைகள் தொடா்பாக பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், ஊராட்சித் துணைத் தலைவா் பி. சுப்ரமணியன், உதவிப் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் மற்றும் கிராமப் பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT