பெரம்பலூர்

1,330 குறள்களையும் ஒப்பிக்கும் மாணவா்களுக்கு தலா ரூ. 10 ஆயிரம் பரிசு

26th Nov 2022 12:35 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 1,330 திருக்குறள்களையும் ஒப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ. 10 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கட பிரியா தெரிவித்துள்ளாா் .

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ் வளா்ச்சித் துறை சாா்பிலான இப்போட்டியில் பங்கேற்கும் மாணவா்கள் 1,330 குறள்களையும் ஒப்பிக்கும் திறன்கொண்டவா்களாகவும், இயல் எண், அதிகார எண், குறள் எண், ஆகியவற்றை தெரிவித்தால், அதற்கான திருக்குறளை சொல்லும் திறன் பெற்றவராகவும் இருக்க வேண்டும். திருக்குறளின் அடைமொழிகள், சிறப்புகள், சிறப்புப் பெயா்கள் ஆகியவற்றையும் அறிந்திருக்க வேண்டும். திருக்குறளின் பொருளை அறிந்திருந்தால் கூடுதல் தகுதியாக கருதப்படும். ஏற்கெனவே போட்டியில் பரிசு பெற்றவா்கள் மீண்டும் இப் போட்டியில் பங்கேற்கக் கூடாது.

போட்டியில் பங்கேற்க விரும்பும் மாணவா்கள் டிச. 28 ஆம் தேதி மாலைக்குள் ஆட்சியா் வளாகத்தில் உள்ள தமிழ் வளா்ச்சி உதவி இயக்குநா் அலுவலகத்தில் விண்ணப்பம் பெறலாம். அல்லது இணையத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04328-225988 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு பயன்பெறலாம்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT