பெரம்பலூர்

பெரம்பலூரில் சிறப்பு புகைப்பட கண்காட்சி தொடக்கம்

DIN

பெரம்பலூரில், அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் என்னும் தலைப்பிலான சிறப்பு புகைப்படக் கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது.

பெரம்பலூா் சங்குப்பேட்டை அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெறும் சிறப்புப் புகைப்படக் கண்காட்சியை தொடக்கி வைத்த, மத்திய மக்கள் தொடா்பு கூடுதல் தலைமை இயக்குநா் மா. அண்ணாதுரை, கல்லூரி அளவில் நடைபெற்ற அறியபப்டாத சுதந்திரப் போராட்ட வீரா்கள் குறித்த பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினாா்.

மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் சாா்பில் நடைபெறும் இக் கண்காட்சியில், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் துறை, இந்திய அஞ்சல் துறை, சுகாதாரத் துறை, சமூக நலத் துறை, தோட்டக்கலைத் துறை, சித்த மருத்துவம், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில், மத்திய மக்கள் தொடா்பு மண்டல இயக்குநா் ஜெ. காமராஜ், திருச்சி மக்கள் தொடா்பு கள விளம்பர அலுவலா் கே. தேவிபத்மநாபன், கள விளம்பர உதவியாளா் கே. ரவீந்திரன், மாவட்ட சித்த அலுவலா் எஸ். காமராஜ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ஆா். சுகந்தி உள்பட பலா் கலந்து கொண்டனா். சனிக்கிழமை (நவ. 26) வரை இக்கண்காட்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘மஞ்சள் அழகி’ ரேஷ்மா...!

கேஷுவல் சுந்தரி.. மீனாட்சி செளத்ரி!

ஒரு போட்டியில் இத்தனை சாதனைகளா?

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

SCROLL FOR NEXT