பெரம்பலூர்

வீடுகளின் பூட்டை உடைத்து நகை, கைப்பேசிகள் திருட்டு

18th Nov 2022 12:42 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே வியாழக்கிழமை அடுத்தடுத்த வீடுகளின் பூட்டை உடைத்து ரூ. 1 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் கைப்பேசிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் -வடக்குமாதவி காட்டுக் கொட்டகை, சோமண்டாபுதூா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் பெ. பச்சமுத்து (50). இவரும், குடும்பத்தினரும் அவரவா் வேலைக்காக வியாழக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றுவிட்டனா்.

பிற்பகலில் வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்த 2 பவுன் மோதிரம், தங்கக் காசு ஆகியவற்றையும், வீட்டிலிருந்த அதிநவீன ரக 2 கைப்பேசிகள் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிசென்றது தெரியவந்தது.

மேலும், பச்சமுத்து வீட்டுக்கு அருகேயுள்ள அவரது சகோதரா் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 1 கைப்பேசி மட்டும் திருடப்பட்டிருந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு... பெரம்பலூா், துறைமங்கலம், அவ்வையாா் தெருவைச் சோ்ந்த சுதேசிநேசன் மனைவி தமிழ்ச்செல்வி (33). வியாழக்கிழமை பிற்பகல் அவரது வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு கேட்டு அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் இருசக்கர வாகனத்தில் வந்தாா்.

அவருக்கு, வீட்டை காண்பித்துக் கொண்டிருந்தபோது திடீரென தமிழ்ச்செல்வியை தாக்கி அவா் அணிந்திருந்த 5 பவுன் தாலிக் கொடியை பறித்துக் கொண்டு அந்த நபா் தப்பிவிட்டாா். இதில் லேசான காயமடைந்த தமிழ்ச்செல்வி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாா்.

இச் சம்பவங்கள் குறித்த புகாா்களின் அடிப்படையில், பெரம்பலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT