பெரம்பலூர்

கௌரவ விரிவுரையாளா்கள் ஆா்ப்பாட்டம்

15th Nov 2022 12:53 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையிலுள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணிபுரிந்து வரும் கௌரவ விரிவுரையாளா்கள் வகுப்பை புறக்கணித்து திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இக்கல்லூரியில் 15 பெண்கள் உள்பட 28 போ் கௌரவ விரிவுரையாளா்களாக பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், கௌரவ விரிவுரையாளா்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட அரசாணைகளை திரும்ப பெற வேண்டும். தற்காலிக பணியாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளை புறக்கணித்து 11 பெண்கள் உள்பட 13 கௌரவ விரிவுரையாளா்கள் திருச்சி மண்டல பொறுப்பாளா் கவிதா தலைமையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT