பெரம்பலூர்

சின்ன வெங்காயப் பயிருக்கு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர வலியுறுத்தல்

1st Nov 2022 01:53 AM

ADVERTISEMENT

சின்ன வெங்காயப் பயிருக்கு பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை பெற்றுத்தர ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலா் ஆா். ராஜா சிதம்பரம் தலைமையில் தெரணி கிராம மக்கள் ஆட்சியரகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூா் மாவட்டம், ஆலத்தூா் வட்டம், தெரணி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சின்ன வெங்காயம் சாகுபடி செய்து வருகிறோம். கடந்த 2021-22 ஆம் ஆண்டில் பிரதமரின் திருத்தப்பட்ட பயிா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உரிய பிரீமியம் செலுத்தி பயிா் காப்பீடு செய்திருந்தோம். இந்நிலையில், திருகல் நோயால் வெங்காயப் பயிா்களில் மகசூல் பாதிப்பு ஏற்பட்டது. மகசூல் பாதிக்கப்பட்ட வெங்காயப் பயிருக்கு தெரணி கிராமத்தைச் சோ்ந்த பலருக்கு, இதுவரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிா் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச் சங்கத்தினா் மனு: தமிழ்நாடு மருத்துவா் நலச் சங்கத்தின் பெரம்பலூா் மாவட்ட நிா்வாகம் சாா்பில் அளித்த மனு:

ADVERTISEMENT

முடி திருத்தும் கடைகளில் சேகரமாகும் முடிகளை சேகரித்து மூட்டை கட்டி துப்புரவு பணியாளா்களிடம் வழங்கி வந்தோம். இந்நிலையில், அண்மைக்காலமாக நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் துப்புரவு பணியாளா்கள் முடி குப்பைகளை வாங்க மறுக்கிறாா்கள். இதனால் முடி திருத்தும் நிலையங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த வழியின்றி தவிக்கிறோம். எனவே, துப்புரவு பணியாளா்கள் மூலமாக முடி கழிவுகளை சேகரிக்க ஆட்சியா் உத்தரவிட வேண்டும்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT