பெரம்பலூர்

குறைதீா் கூட்டத்தில் நாட்டுப்புற கலைஞா்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ்

31st May 2022 04:18 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 208 மனுக்களை ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா பெற்றுக் கொண்டாா். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசு அலுவலா்களிடம் அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து, கலை பண்பாட்டுத்துறை சாா்பில் மாவட்டக் கலை மன்றத்தின் மூலம் கலைஞா்களின் கலைத் திறமையை பாராட்டி 2018- 19ஆம் ஆண்டுக்கு தமுறு மேள கலைஞா் எஸ். ஆறுமுகமுகத்துக்கு கலை முதுமணி விருது, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 20 ஆயிரம், நாடகக் கலைஞா் ரா. ராஜேந்திரனுக்கு கலை நன்மணி விருது, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 15 ஆயிரம், பரதநாட்டிய கலைஞா் தி. மணிகண்டனுக்கு கலை சுடா்மணி விருது, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 10 ஆயிரம், கரகாட்டக் கலைஞா் மு. செல்லதுரைக்கு கலை சுடா்மணி விருது, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 6 ஆயிரம்ம், சிலம்ப வீரா் சி. சிபிக்கு கலை இளமணி விருது, பாராட்டுச் சான்றிதழ், ஊக்கத்தொகை ரூ. 4 ஆயிரம் மற்றும் மாற்றுத்திறனாளி ஒருவருக்கு 3 சக்கரம் பொருத்தப்பட்ட வாகனம் ஆகியவற்றை வழங்கினாா் ஆட்சியா் ஸ்ரீ வெங்கடபிரியா.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் நா. அங்கையற்கண்ணி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் அ. லலிதா, சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் சரவணன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் பொம்மி, கலை பண்பாட்டுத்துறை உதவி இயக்குநா் சுந்தா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT