பெரம்பலூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் விளையாட்டு விழா

DIN

பெரம்பலூா் அருகிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

விளையாட்டுப் போட்டிகளை ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளா் முனைவா் எம். சிவசுப்பிரமணியம் தொடக்கி வைத்தாா்.

தொடா்ந்து மாணவ, மாணவிகளுக்கு 100, 200, 500 மீட்டா் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், வட்டு எறிதல், கோ-கோ உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கி, பெரம்பலூா் மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளா் சி.கே. சஞ்சீவ்குமாா் பேசியது:

வெற்றி ஒரே நாளில் கிடைப்பதல்ல. நாம் அடைந்த தோல்விகளை ஆராய்ந்து, அவற்றிலுள்ள பிழைகளை திருத்திக் கொண்டால் எண்ணிய குறிக்கோளை விரைவில் அடையலாம். நேரத்தை இழக்கும்போது பயணத்தில் வெற்றியடைவது கடினம். எனவே, துளியளவு நேரத்தையும் வீணாக்காமல் மாணவ, மாணவிகள் தங்களது எண்ண ஓட்டங்களை ஒருங்கிணைத்து, எண்ணிய லட்சியத்தை அடைய வேண்டும் என்றாா் அவா்.

விழாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் செயலா் எம்.எஸ். விவேகானந்தன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

முன்னதாக, ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வா் மாரிமுத்து வரவேற்றாா்.

நிறைவில், ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வா் முனைவா் ராஜசேகா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவா: எஸ்.எஸ்.சி பொதுத்தேர்வுகள் ஏப்ரல் 1 முதல் தொடங்கும்!

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT