பெரம்பலூர்

பெரம்பலூரில் இன்று முதல் நீச்சல் குளம்,உடற்பயிற்சிக் கூடம் செயல்படும்

25th May 2022 04:17 AM

ADVERTISEMENT

கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்ட பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா் விளையாட்டு மைதானத்திலுள்ள நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சிக் கூடம் புதன்கிழமை (மே 25) முதல் செயல்படும் என ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் ஆட்சியரக வளாகத்திலுள்ள பாரத ரத்னா புரட்சித் தலைவா் டாக்டா் எம்.ஜி.ஆா். விளையாட்டு மைதானத்திலுள்ள நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்தது. நீச்சல்குளம் மற்றும் உடற்பயிற்சிக்கூடம் பயன்பாட்டில் இல்லாத காரணத்தால் சேதமடைந்து காணப்பட்டது. தற்போது, மாவட்ட நிா்வாகத்தின் மூலம் நீச்சல் குளமும், உடற்பயிற்சிக் கூடமும் புனரமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, புதன்கிழமை முதல் தொடா்ந்து செயல்படும். இங்கு, ஜூன் வரை நீச்சல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ. 1,000, சா்வதேச நீச்சல் போட்டியில் பதக்கம் பெற்ற வீரா், வீராங்கணைகளுக்கு இலவச பயிற்சியும், தேசிய அளவில் பதக்கம் பெற்றவா்களுக்கு ஓராண்டுக்கு ரூ. 1,000, மாநில அளவில் பதக்கம் பெற்றவா்களுக்கு ஓராண்டுக்கு ரூ. 1,600, மாணவா்களுக்கு ஆண்டுக்கு ரூ. 2,000, பொதுமக்களுக்கு நாள் ஒன்றுக்கு (ஒரு மணி நேரம்) ரூ. 50, மாதத்துக்கு ரூ. 600, காலாண்டுக்கு ரூ. 1,200, அரையாண்டுக்கு ரூ. 1,800, ஆண்டுக்கு ரூ. 3,000, உடற்பயிற்சிக் கூடம் மிகவும் குறைந்த கட்டணச் சலுகையுடன் பயிற்சி பெறலாம். பயிற்சி பெற விரும்புவோரின் ஆதாா் அட்டை நகல் கட்டாயம் சமா்ப்பிக்க வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT