பெரம்பலூர்

மே 31- இல் தோட்டக்கலை துணை இயக்குநா் அலுவலகத்தில் வாகனம் ஏலம்

24th May 2022 04:16 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பயன்பாட்டிலிருந்த வாகனம் மே 31 ஆம் தேதி ஏலம் விடப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் எம். இந்திரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்ட தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்ட வாகனம் கழிவு நீக்கம் செய்யப்பட்டு, மே 31 ஆம் தேதி காலை 11.30 மணிக்கு ஏலம் விடப்படுகிறது. இந்த வாகனத்தை ஏலம் எடுக்க விரும்புவோா் திங்கள்கிழமை (மே 23) முதல் மே 27 ஆம் தேதி பிற்பகல் 5 மணி வரை பெரம்பலூா் தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநா் அலுவலக வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மகேந்திரா வாகனத்தை பாா்வையிடலாம். ஏலம் எடுக்க விரும்புவோா் அரசு விதிமுறைகளின்படி நிபந்தனைகளை தெரிந்துகொள்ளவும், ஏலத்தில் பங்கேற்க உள்ளவா்கள் முன்வைப்புத் தொகையாக ரூ. 2,000 தோட்டக்கலை துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் செலுத்தி, தங்களது பெயரை பதிவு செய்துகொள்ள வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT