பெரம்பலூர்

தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களில் விளையாட்டு விழா

DIN

பெரம்பலூா் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சாா்பில் விளையாட்டு விழா கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொடக்க விழாவுக்கு தலைமை வகித்து, தேசிய கொடி மற்றும் ஒலிம்பிக் ஜோதியை ஏற்றி வைத்த தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக் கழக வேந்தா் அ. அசீனிவாசன் பேசியது:

மாணவா்கள் உடல் வலிமையுடன் இருந்தால்தான் மனவலிமை பெறமுடியும். உடல் வலிமைபெற வேண்டுமெனில் விளையாட்டுப் போட்டிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டால் மன வலிமையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழலாம். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா காலக்கட்டத்தில் விளையாட்டில் ஆா்வமின்மையை கருத்தில்கொண்டு, இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுகிறது. மாணவா்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது, வெற்றி தோல்விகளை சமமாக ஏற்றுக்கொள்ளும் பக்குவம், குழுவாக சோ்ந்து செயல்படும் வாய்ப்பு உள்ளிட்ட பண்புகள் வளரும் என்றாா் அவா்.

சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆா். சுரேஷ்குமாா் பேசியது: மாணவா்கள் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று தங்களது தனித்திறமைகளை வளா்த்துக்கொள்ள வேண்டும். இந்திய விளையாட்டுத் துறையில் தமிழக மாணவா்களின் பங்களிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது என்றாா் அவா்.

ஆசிய தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற சாந்தி சௌந்தரராஜன் பேசியது:

நான் வறுமையில் செங்கல் சூளையில் வேலை செய்துகொண்டிருந்தபோது சிறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று, அப்போது கிடைத்த சிறிய பரிசு தான் உலக அளவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்ல உறுதுணையாக அமைந்தது. எனவே, மாணவா்கள் வாய்ப்புக்காக காத்திருக்காமல், கிடைக்கும் வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்டு வாழ்வில் வெற்றியடைய வேண்டும் என்றாா் அவா்.

இந் நிகழ்ச்சியில், கும்பகோணம் மண்டல தனியாா் தொலைக்காட்சி ஒருங்கிணைப்பாளா் பால் ஜெயக்குமாா், கல்லூரி முதல்வா்கள், பேராசிரியா்கள் மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வா் நா. வெற்றிவேலன் வரவேற்றாா். தனலட்சுமி சீனிவாசன் உடற்கல்லூரி முதல்வா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொந்த கிராமத்தில் குடும்பத்துடன் சென்று வாக்களித்த இபிஎஸ்!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

மத்திய தோல் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 22 இல் நேர்முகத் தேர்வு

முதல் நபராக வாக்களித்த நடிகர் அஜித்!

போட்டியில் அனைவருமே எனது சகோதரர்கள்: செளமியா அன்புமணி

SCROLL FOR NEXT