பெரம்பலூர்

அயன்பேரையூரில் பாதுகாப்பு விழிப்புணா்வுக் கூட்டம்

20th May 2022 02:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகேயுள்ள அயன்பேரையூா் கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு காவல்துறை சாா்பில், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ச. மணி உத்தரவின்படி நடைபெற்ற இக் கூட்டத்துக்கு மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்புப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பாண்டியன் தலைமை வகித்தாா். காவல் ஆய்வாளா் விஜயலெட்சுமி, அயன்பேரையூா் கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்களிடம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தி, காவல் நிலையங்களில் செயல்படும் பெண்கள் உதவி மைய இலவச தொலைபேசி எண் 181, குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க 1098 என்னும் இலவச தொலைபேசி எண் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

மேலும், குழந்தைத் தொழிலாளா் முறை குறித்தும், கிராமப் பகுதிகளில் குழந்தைத் தொழிலாளா் முறை இருந்தால் அவற்றை ஒழிக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு அறிவுறுத்தினா்.

இந்த நிகழ்ச்சியில், சிறப்பு உதவி ஆய்வாளா் மருதமுத்து மற்றும் கிராம பொதுமக்கள் பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT