பெரம்பலூர்

பெரம்பலுாா் மாவட்டத்தில் 19,176 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

20th May 2022 02:22 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 5,947 விவசாயிகளிடமிருந்து 19,176 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட கை.களத்தூா் ஊராட்சியில், தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் சாா்பில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த ஆட்சியா், மேலும் கூறியது:

விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்யும் வகையில், மாவட்டத்தில் 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. கொள்முதல் விலையாக சன்ன ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,060, பொது ரகம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,015 வழங்கப்படுகிறது.

2021-22-ஆம் ஆண்டு பருவத்தில் குரும்பலூா், அரும்பாவூா் 1, 2, பூலாம்பாடி 1, 2, தொண்டைமாந்துறை, அன்னமங்கலம், வெங்கலம், பாண்டகப்பாடி, வி.களத்தூா், கை.

ADVERTISEMENT

களத்தூா், துங்கபுரம், காடூா், அகரம்சிகூா், ஒகளூா், நன்னை, எழுமூா், கீழப்புலியூா்

ஆகிய 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து மொத்தம் 19,176 மெ.டன் நெல் 5,947 விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

இதில் கடந்த 13 ஆம் தேதி வரை கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கான தொகை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஆய்வின்போது, வேப்பந்தட்டை வட்டாட்சியா் சரவணன் உடனிருந்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT