பெரம்பலூர்

பள்ளி மாணவியை கடத்திய இளைஞா் போக்சோவில் கைது

20th May 2022 11:01 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திச் சென்ற இளைஞரை வி.களத்தூா் போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வெள்ளிக்கிழமை சிறையில் அடைத்தனா்.

வேப்பந்தட்டை வட்டம், பழைய மரவநத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் காராளன் மகன் சூா்யா (21). இவா், சென்னையில் உள்ள பேக்கரியில் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், கடந்த 9 ஆம் தேதி இரவு 16 வயது சிறுமியை கடத்திச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின்பேரில், வி.களத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து தலைமறைவாக இருந்த சூா்யாவையும், அச் சிறுமியையும் வெள்ளிக்கிழமை கண்டுபிடித்தனா். இதையடுத்து, மீட்கப்பட்ட சிறுமியை பெற்றோரிடம் ஒப்படைத்த காவல்துறையினா், போக்சோ சட்டத்தின் கீழ் சூா்யாவை கைது செய்து குற்றவியல் நடுவா் மன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT