பெரம்பலூர்

விளையாட்டு வீரா்கள் கவனத்துக்கு...

20th May 2022 11:03 PM

ADVERTISEMENT

நிகழாண்டு முதல் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க மற்றும் வெற்றி பெற்ற்கான சான்றிதழ்கள் பெற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ஆட்சியா் ப. ஸ்ரீ வெங்கடபிரியா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் பெரம்பலூா் மாவட்டப் பிரிவு சாா்பில், 2022 - 2023 ஆம் ஆண்டு முதல் விளையாட்டு வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்கவும், வெற்றி பெற்ற சான்றிதழ்கள் வழங்குவதற்கான புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், விளையாட்டு செய்திகளை தெரிந்துக்கொள்வதற்கும் ற்ய்ள்ல்ா்ழ்ற்ள்.ா்ழ்ஞ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து பயன்படுத்த வேண்டும். இச் செயலியை (பசநடஞதபந- அடட) பதிவிறக்கம் செய்வதற்கு விளையாட்டு வீரா்கள் இ-மெயில் முகவரி, கைப்பேசி எண், பிறந்த தேதி, ஆதாா் எண் மற்றும் இதர விவரங்களை குறிப்பிட்டு பதிவேற்றம் செய்ய வேண்டும்.

ADVERTISEMENT

விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பவா்கள் மற்றும் வெற்றி பெற்றவா்களுக்கான சான்றிதழ்கள் இந்த செயலியில் பதிவு செய்த வீரா்களுக்கு மட்டுமே டிஜி லாக்கா் மூலம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரும் ஆடுகளம் செயலியில் விரைவாக பதிவேற்றம் செய்து பயன்பெறலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT